காணாமல் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை நீதிமன்றில்ஆஜர்படுத்துமாறு அவரது மனைவி நீதிமன்றில் முன்வைத்த மனுவானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதியும், இராணுவத்தின் புலனாய்வு பிரிவின்பொறுப்பாளரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு நீதிமன்றில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணியே இந்த எதிர்ப்பைவெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட வேண்டியுள்ளதாகவும்,ஒக்டோபர் மாதம்12ம் திகதி குறித்த விடயம் தொடர்பில் சிறப்பு ஆராய்வு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிபதி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.