எக்னேலிகொட வழக்கு மீளவும் 20அன்று விசாரணைக்கு..

காணாமல் போனதாக கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, அவரது மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் அடுத்த 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரைப் பெயரிட அனுமதிக்குமாறு சந்தியா எக்னலிகொட சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரியதாக, மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இது பற்றி ஆராய சம்பந்தப்பட்ட வழக்கை 20ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.