எச்சந்தர்ப்பத்திலும், பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக GMOA தெரிவிப்பு…

வைத்தியர்களுக்கும், வைத்திய சேவையில் காணப்படும் குறைகளுக்கும் உரிய முறையில் தீர்வுகள் கிடைக்காததால் இன்றைய(20) தினத்தில் எச்சந்தர்ப்பத்திலும், வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராக உள்ளதாக நேற்று(19) கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்திருந்தார்.

வைத்தியர்களுக்கும் வைத்திய சேவையிலும் பிரதானமாக 10 சிக்கல் நிலைகள் காணப்படுவதாக நேற்று(19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில் பிரதான பிரச்சினைகளாக வைத்தியக் கல்வியின் ஆகக் குறைந்த தரம் குறித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமை, வைத்தியர்களின் தர உயர்வுகளில் உள்ள சிக்கல் நிலைமை மற்றும் புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தினூடாக வைத்தியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரின் சம்பளத்தில் வரி அறவிடப்படுகின்றமை என்பவைகளாகும் என குறித்த சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வு சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து தீர்மானிக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்திருந்தார்.

 

R.Rishma