எச்.என்.டி.ஏ பல்கலைக்கழக மாணவர்களின் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரி மீண்டும் பணியில்

எச்.என்.டி.ஏ பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி மீண்டும் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் தமக்கான வேலைவாய்ப்பை கோரி அரசாங்கத்திற்கு எதிராக இந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை பொலிஸாரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவமானது, ஊடகங்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும், இந்த பொலிஸ் அதிகாரி மீதான குற்றப்பத்திரிகைக்கமைய ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் பின்னர் இந்த பொலிஸ் அதிகாரி மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக கிருலப்பனை பொலிஸ் நிலையத்தின் அதிகாரியான உபுல் இந்திரஜித் கினிகே பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மீண்டும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு சேவை நிமித்தம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.