(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதனை அடுத்து பாராளுமன்ற கூட்டத் தொடர் அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி அன்றைய தினம் அரச கொள்கை பிரகடனத்தை முன்வைத்ததன் பின்னர் பிற்பகல் 12.30 இல் இருந்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அதில் 2020 ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் சபை நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (23) இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.