(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2018 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான சொத்து அறிவிப்புக்களை சமர்ப்பிக்கத் தவறியதால் எட்டு அமைச்சர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு அமைப்பான இலங்கையில் உள்ள டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த முறைப்பாடுகள் அனைத்தும் இன்று(10) இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பில் மேலும் தெரிவித்துள்ளது.