எதிர்கட்சித் தலைவர் – ஜேவிபி இடையே சந்திப்பு – தீர்மானம் பிற்பாடு..

(FASTNEWS| COLOMBO) – எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய(06) கலந்துரையாடலில் ஜே.வி.பியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை பொதுமக்கள் கருத்துக் கணிப்பின் ஊடாக நிறைவேற்றுவதற்கு இடமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு பதிலளித்திருந்த எதிர்க்கட்சித் தரப்பினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதில் கொள்கை அடிப்படையில் இணங்கியிருந்ததாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாராளுமன்ற தேர்தல் முறைமை மற்றும், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பன குறித்து கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தரப்பினர் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில், ஜே.வி.பியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத் மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரும், ஒன்றிணைந்த எதிரணின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.