(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்கட்சியின் பிரபல அரசியல்வாதி ஒருவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் என கூறப்படும் காணொளி ஒன்று வாட்சப் வலைதளத்தில் வைரலாக பரிமாறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணொளியில் இருவரும் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு ஒருவரை ஒருவர் திட்டுவதாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த காணொளியில் அரசியல்வாதி எனக் கூறப்படும் நபரின் குரல் கேட்கின்ற போதிலும் அவரது உருவம் தெளிவில்லாமல் உள்ளதோடு, குறித்த முன்னாள் உறுப்பினர் கட்டிலில் சாய்ந்தவண்ணம் உள்ளதாகவும் பதிவாகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் என கூறப்படும் ஓரினச்சேர்க்கை காணொளி ஒன்றினை பிரபல பாடகரான இராஜ் வீரரத்ன, பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் இவை பொதுத் தேர்தலை முன்னிறுத்திய அரசியல் காய் நகர்த்தல்கள் என கூறப்படுகின்றது.