பருப்பு மற்றும் சீனி ஆகிய பொருட்களுக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகூடிய சில்லறை விலைக்கு இவற்றைத் தொடர்ந்தும் விற்பனை செய்ய முடியாது என்றும் அந்தச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது கையிருப்பிலுள்ள பருப்பு, சீனி முடிவடைந்தால் எதிர்காலத்தில் விற்பனைக்கு இல்லாமல் போகும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பருப்பு, சீனி உள்ளிட்ட 6 அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிகூடிய சில்லறை விலையை அரசு நிர்ணயித்துள்ளது.
இதற்கமைய பருப்பு கிலோ ஒன்றுக்கு 169 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சீனிக்கு கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படவில்லை.
இதனால், பொதி செய்யப்படாத சீனி ஒரு கிலோ 87 ரூபாவுக்கும், பொதி செய்யப்பட்ட சீனி ஒரு கிலோ 95 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாட்டு விலையை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டு விலைக்குப் பொருட்களை விற்கமுடியாது என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும், இலாபம் இல்லாவிட்டாலும், கட்டுப்பாட்டு விலைக்கே விற்கவேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்து பிடிபட்டால் 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடுகின்றனர். அதை எமக்குச் செலுத்த முடியாது என்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாட்டு விலையை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டு விலைக்குப் பொருட்களை விற்கமுடியாது என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலாபம் இல்லாவிட்டாலும், கட்டுப்பாட்டு விலைக்கே விற்கவேண்டும். அதிக விலைக்கு விற்பனைசெய்து பிடிபட்டால் 5 ஆயிரம், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடுகின்றனர். அதை எமக்குச் செலுத்தமுடியாது என்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.