ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற தலைவர் தினேஷ் குணவர்தனவின் ஜாதகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜாதகத்திற்கு இணையான ராஜயோகத்துடன் இருப்பதாக ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.
தினேஷ் குணவர்தனவின் ஜாதகத்திற்கு அமைய அவர் எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தலைவராகவோ பிரதமராகவோ பதவிக்கு வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தினேஷ் குணவர்தனவுக்கு கட்டாயம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என தெரிவித்துள்ள விஜேமுனி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டில் 02 முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பார் எனவும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தெரிவு செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளார்.