(FASTGOSSIP | COLOMBO) – 2019 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய(01) போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய நிலையில், இலங்கை அணி சார்பில் முதலில் சதத்தினை பூர்த்தி செய்தவர் இளம் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ என்பதில் ஐயமில்லை.
துடுப்பாட்ட பட்டியலில் பொறுப்புமிக்க இடமான இல.03 இல் உள்ள குறித்த இளம் துடுப்பாட்ட வீரர் உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் அதி உயர் வரவேற்பினை பெற்றுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதனிடையே சர்வதேச கிரிக்கெட் சபையும் அதன் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவிஷ்க தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கை கிரிக்கெட் எதிர்காலத்தின் அடுத்த நட்சத்திரம் இவர் தான்” என தெரிவித்துள்ளது.
அவிஷ்க பெர்னாண்டோ பெற்றுக் கொடுத்த சதத்துடன் இலங்கை அணியானது முதல் முறையாக குறித்த உலகக் கிண்ண போட்டிகளில் 250 ஓட்டங்களை தாண்டியமையும் குறிப்பிடத்தக்கது.