தென்னிலங்கை சிறைகளில் உள்ள சுமார் 84 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தலையீடு செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வடக்கு சிவில் சமூக அமைப்புகள் தொடர்ச்சியான கோரிக்கை விடுத்து வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(rizmira)