(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(17) நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டட தொகுதியில் முற்பகல் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது, தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், புதிய கூட்டணி தொடர்பில் கட்சியின் செயற்குழுவுக்கு தெளிவுபடுத்தவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.