எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சர்வதேச பராளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 93 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
எனினும் 16 பேர் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்குரியதாகும் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.