புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மத்திய அரசின் ஒரு பகுதியாக இருக்கும் சந்தர்ப்பம் உருவாவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நடைபெற்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியுடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு உடன்பட்டுள்ளது.
ஆகையால் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று அவர் குறித்த தெரிவிப்பின்போது தெரிவித்துள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=2MtA7j7UOBs” width=”560″ height=”315″]
(riz)