தாம் எதிர்பார்த்ததை போன்று கோத்தாவின் போர் என்ற நூல் பிரபலமடையவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார்.
இதனால் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் யுத்தக்கால நிகழ்வுகள் தொடர்பாக எழுதப்பட்ட நூல்கள் பல பிரபலமடைந்துள்ளன. அவற்றைப் போன்று தனது நூலும் பிரபலமடையும் என எதிர்பார்த்திருந்தேன்.
இதனைகொண்டே கோத்தாவின் போர் என்ற நூலும் வெளியிடப்பட்டது. எனினும், துரதிஷ்டவசமாக அந்த நூல் பிரபலமடையவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கோத்தாவின் போர் என்ற நூலை சந்திரபிரேம என்ற ஊடகவியலாளர் மூலம் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.