எவ்வித எதிர்ப்புகளுக்கும் மற்றும் அச்சுறுத்தல்களுக்கும் அடிப்பணிந்து தேசிய அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(22) நடைபெற்ற வைபவம் ஒன்றிற்கு பின்னர், கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சிலாபம் பிரதேசத்தில் மீனவர்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக நீர்கொழும்பு மீனவர்கள் ஆரம்பித்துள்ள சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சிலாபம் மற்றும் வென்னப்புவ மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லாது எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.