எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பிலியந்தலை – கரதியான பகுதியில் குப்பைகளை கொட்டும் பணி தொடர்கிறது..

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் சேரும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து இன்று(20) அப்பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஹங்வெல்ல – கிரிதிவெலை வீதியை மறித்து இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் சேரும் குப்பைகளை தமது பகுதியில் கொட்ட இடமளிக்க முடியாது என, இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், இன்று வழமைபோல பிலியந்தலை – கரதியான கழிவு கூடத்தில் 349 மெற்றிக் தொன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

 

(rizmira)