அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களை, அரச தொழில்களுக்காக இணைத்துக் கொள்வதை நிராகரிப்பதற்கான கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கு அரசு தயாராகி வருவதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு வகையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கலகங்கள் உள்ளிட்ட குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள், பல சந்தர்ப்பங்களில் அரச சொத்துகளுக்குக் கடுமையான சேதத்தை விளைவித்தமையைக் கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.
இவை தொடர்பில் கவனம் செலுத்தியதன் பின்னரே, மேற்குறிப்பிட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு ஆலோசித்து வருவதாக, அரச உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், அரச முன்னுரிமை சேவைகளான, நிர்வாக சேவை, கணக்காளர்கள் சேவை, முகாமைத்துவ சேவை மற்றும் வைத்திய சேவை ஆகிய சேவைகளுக்கே, மேற்படி நபர்களை இணைந்து கொள்ளாமல் விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகிறது.