எதிர்வரும் இரு நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய மழை..

மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அமுக்க நிலை மேலும் உயரும் பட்சத்தில் வடக்கு நோக்கி பங்களாதேஷ் நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவ்வாறு நிகழ்ந்தால் எதிர்வரும் இரு நாட்களுக்கு தென்மேற்கு பருவமழையினை எதிர் நோக்க வேண்டியிருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று(29) மற்றும் நாளை(30) நாடளாவிய ரீதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு; மத்திய,சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் 100mm அளவான மழைவீழ்ச்சியும் பதிவாகலாம் என குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)