எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இவ்வருட இறுதியில்..

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இவ்வருட டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் அதற்காக களநிலவரங்களைத் தயார் செய்யுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தனது கட்சியின் மத்திய செயற்குழுவைக் கேட்டுள்ளார்.

நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் ஏற்படாதிருந்தால், தேர்தல் பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இத்தேர்தலில் ஐ.தே.க. யின் படித்த தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் எனவும், பெண்களின் பிரதிநிதித்துவம் 25% ஆக காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)