எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ.சு.கட்சி சார்பில் 25 வீதமான பெண்களுக்கு வாய்ப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் 25 வீதமான பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்முறை தேர்தலுக்காக பல புது முகங்கள் களமிறங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்முகப்பரீட்சைகள் இந்த வாரங்களில் ஆரம்பமாகும் எனவும் துமிந்த திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.