எதிர்வரும் சில நாட்களில் தென்மேற்கு பகுதியில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் நாட்டின் ஊடாக மற்றும் வடக்கு, தென் மாகாணங்களின் கடற்பிரதேசங்களில் இடைக்கிடையில் 50Km அளவில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய நிலையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என்பதால் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை குறைத்து கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த அந்த திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.