எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல பிரதேசங்களில் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 75 தொடக்கம் 100 மில்லி மீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(10) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.