எதிர்வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி விசேட பஸ் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த சேவைக்காக மேலதிகமாக சுமார் 80 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான கண்காணிப்பு அதிகாரி பி.எச்.ஆர்.டீ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகளும் சிறந்த முறையில் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான கண்காணிப்புஅதிகாரி பி.எச்.ஆர்.டீ.சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(rizmira)