எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பேன் – மஹிந்த

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

சற்று முன்னர் மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னாள் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அறிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் விடுப்பும் அழைப்பை புறக்கணிக்க மாட்டேன் என்றும் அதற்கான உரிமை தனக்கு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

இன்னும், பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.