எதிர்வரும் மே மாதம் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
உத்தேச இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை அமுல்படுத்தும் வரையில், குறித்த ஸ்மார்ட் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த ஸ்மார்ட் அடையாள அட்டை அறிமுகத்துடன், 1972ம் ஆண்டு முதல் இதுவரையில் புழக்கத்தில் உள்ள லெமினேடிங் செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முறைமை இரத்தாகும் என தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
பழைய இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 45 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் தேசிய அடையாள அட்டைகளில் காணப்படும் சில குறைபாடுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், இந்த பழைய முறைமை தற்காலத்தில் எந்த வகையிலும் பொருத்தமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.