எதிர்வரும் வாரம் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படும்…

எரிபொருள் விலை அதிகரிபினை தொடர்ந்து எதிர்வரும் வாரத்திலிருந்து பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைவாக பேரூந்து பயணக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக பேரூந்து கட்டணத்தை 10 சதவீத்தால் அதிகரிக்கவும், அத்துடன் குறைந்தபட்ச பேரூந்து கட்டணமான 12 ரூபாவினை, 15 ரூபாவாகவும் அதிகரிக்கும் படியும், இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.