(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் பிரதான நகரங்களில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வாகன நெரிசல்களை மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் குறித்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சாரதிகளுக்கு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளதுடன், இது தற்பொழுது அமுலில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஷேடமாக பயணிகள் போக்குவரத்து பேரூந்துகள் வீதியின் வலது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பேரூந்துகளுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விஷேட வீதி நிரல் கொழும்பு, கல்கிசை வெலிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த முக்கிய வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வீதி நிரல் முறையை பேரூந்து சாரதிகளும் பின்பற்ற வேண்டும் என பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.