எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கல்வி உரிமைகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக அவர்கள் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று(07) முற்பகல் துண்டுபிரசுரங்களை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.