எதிர்வரும் 12ம் திகதி திட்டமிட்டபடி சந்திப்பு…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் எதிர்வரும் 12-ம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் குறித்த சந்திப்பு நடைபெறுவதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில்,
இந்நிலையில், திட்டமிட்டபடி எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.