இன்றிலிருந்து எதிர்வரும் 14ம் திகதி வரை மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்கக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மாகணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் காலி , மாத்தறை, இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 75 மில்லிமீற்றர் கடும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை மற்றும் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவினூடாக காங்கேசன்துறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் இடியுடன் கூடிய மழையின்போது இந்த பிரசேதங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இடி மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.