எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு…

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறையாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமையவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வெசாக் தினமானது இம்முறை சனி(18) மற்றும் ஞாயிறு(19) தினங்களில் இடம்பெறவுள்ளமையினால் திங்கட்கிழமை(20) இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.