(FASTNEWS | COLOMBO) – வடக்கு புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக புகையிரத சேவைகள் சில எதிர்வரும் 20ம் திகதி இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை புகையிரத சேவைகள் தெரிவித்துள்ளது.
பொல்கஹவெல தொடக்கம் பொதுஹர வரையிலான பகுதிகளில் திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே துணை வர்த்தக ரீதியான கண்காணிப்பு அதிகாரி டப்ளியு.டீ.ரஞ்சித் பத்மலால் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மீனகயா கடுகதிப் புகையிரதம், தலைமன்னார் இரவு தபால் சேவை புகையிரதம், காங்கேசன்துறை இரவு தபால் புகையிரத சேவை மற்றும் திருகோணமலை இரவு தபால் சேவை ஆகியவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், பொல்கஹவெல தொடக்கம் மஹவ சந்தி வரையிலான சேவையானது ரயில் பஸ் ஊடாகவும், கொழும்பு கோட்டை முதல் கனேவத்தை வரையிலான ரயில் சேவையான காங்கேசன்துறை முதல் கொழும்பு கோட்டை வரையில் பயணிக்கும் கடுகதிப் புகையிரதம் வழமை போல் இயங்கும் எனவும் இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது.