எதிர்வரும் 22ம் திகதி முதல் இரவு நேரங்களிலும் திறக்கப்படவுள்ள மிருகக்காட்சி சாலை..

எதிர்வரும் 22ம் திகதி முதல் தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரங்களிலும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7.30 முதல் இரவு 10 மணிவரை மிருக காட்சி சாலையில் சில பகுதிகளை மட்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் மிருகங்கள் வாழும் எல்லையில் இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இரவு நேரத்தில் மிருகங்களின் செயற்பாடுகளை கண்டறிவதற்கும் அது தொடர்பான மேலதிக அறிவை பெற்றுக் கொள்வதற்கும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்ட்டுள்ளது.

இதேவேளை இவ் அரிய வாய்ப்பு தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கை மிருகக்காட்சி சாலையில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் அதிகளவான சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.