எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மழையுடனான காலநிலை நாட்டின் பல பாகங்களிலும் எதிர்பார்க்க முடியுமென, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு,கிழக்கு,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
மேலும், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில், மழை அல்லது இடியடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.