எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் பேரூந்து கட்டணம் 4 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சொகுசு, அரைசொகுசு உள்ளிட்ட அனைத்து பேரூந்து சேவைகளுக்கும் கட்டண குறைப்பு அமுலாகும் என தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.