விக்கேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் டிராக்கான சொடக்கு பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.
இப்படத்தில் இருந்து `நானா தான வீணா போனேன்’ என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் டிராக்கான `சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடல் எதிர்வரும் ஒக்டோபர் 26-ஆம் திகதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தீபாவளியை முன்னிட்டு `சொடக்கு’ பாடலின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், முழு பாடலும் தற்போது வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் டீசர் நவம்பரிலும், இசை வெளியீடு மற்றும் டிரைலர் டிசம்பரிலும் நடக்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் எதிர்வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.