எதிர்வரும் 8ம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்…

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் சீன தயாரிப்பிலான பெட்டிகள் பொருந்திய ரயில் சேவையில் ஈடுபடபோவதி​ல்லை என ரயில் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் களனிவெளி ரயில் பாதையுடனான போக்குவரத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று(02) நடைபெற்ற ரயில் சாரதிகளின் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில் சாரதிகள் சங்க செயலாளர், இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.