அரச நில அளவையாளர்கள் சங்கத்தினர் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலங்கையின் காணி அளவீட்டுப் பணிகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கைக்கு எதிராக தற்போது உள்ளக ரீதியான தொழிற்சங்க நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.