எதிர்வரும் ICC சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் லசித் மாலிங்க..

எதிர்வரும் ICC சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை இணைத்துக் கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்(06) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற T20 போட்டியை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்திருந்தார்.

கிரிக்கெட் தொடர்பில் மாலிங்கவின் அனுபவம் சிறந்து காணப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை , இம்முறை IPL போட்டித் தொடரில் மலிங்கவின் பந்துவீச்சு தொடர்பில் தான் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)