எந்த உணவுகளில் எந்த நெய் சேர்த்துச் சாப்பிடலாம்?

நெய் உடலுக்கு நல்லது. இந்த நெய்யை ஆரோக்கியமான முறையில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியப் பொருளான நெய்யை உருக்கிச் சாப்பிடுவதால், மருத்துவப் பலன்களும் முழுமையாகக் கிடைக்கும். ஆனால், இது கெட்டது என்றும் கெட்ட கொழுப்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. நெய் நல்லதுதான். ஆனால், அது சுத்தமான பசுநெய்யாக இருக்க வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

பசு நெயில் நல்ல கொழுப்பு உள்ளது. உடலுக்குப் பல வழிகளில் நன்மையை செய்யக்கூடியது. ஆனால் எப்படி, எந்த முறையில், எந்த உணவுகளுடன் சேரும்போது, இது ஆரோக்கியம் தரும் என்பதில்தான் சூட்சமம் அடங்கியிருக்கிறது. எந்த நெய் நல்லது, அதை ஆரோக்கியமான முறையில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆயுர்வேத மருத்துவப்படி, பசுநெய் தான் சிறந்தது. எருமை மாட்டுப் பாலால் தயாரிக்கப்பட்டதைத் தவிர்ப்பதே உடலுக்கு நல்லது. ஏனெனில், இதில் அதிகக் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், இதில் தாவர எண்ணெய், விலங்குகள் கொழுப்பு போன்ற கலப்படங்கள் சேர்க்கப்படுவதால், உடலில் `எல்டிஎல் கொலஸ்ட்ரால்’ என்னும் கெட்ட கொழுப்பு சேர்ந்து, இதயக்குழாய் அடைப்பு ஏற்பட வழிவகுக்கும். உடனே, நெய்யைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

சுத்தமான பசுநெய்யைத் தேர்ந்தெடுத்து வாங்கிப் பயன்படுத்துவதே சரியான வழி. அதைப் பயன்படுத்துவதுதான் நல்லது என்று ஆயுர்வேத மருத்துவமும் பரிந்துரை செய்கிறது.