நம்பிக்கையில்லா பிரேரணையினை தோற்கடிக்க நேற்று(04) தனக்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்களிக்காது நடுநிலைமை பேணிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது முகநூல் பக்கத்தில் அவர் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.
“அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் எனக்கு ஆதரவு வழங்கியோருக்கு மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக எனக்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்களிக்காது நடுநிலைமை பேணிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளை விருப்பத்துடன் தெரியப்படுத்துகிறேன்..” எனத் தெரிவித்துள்ளார்
