சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தால் எனக்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சி செய்யுமாறு குற்றம் சாட்டியவர்களுக்கு பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன், அரசியல் ரீதியாக பழிவாங்கும் ஒரு வங்குரோத்து நிலைமையே குறித்த குற்றச்சாட்டுக்கள். இதன் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
வெள்ளிக்கிழமை இரவு வசந்தம் தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,இன்று எனது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமல்லாமல் நாட்டின் பல மாவட்டங்களிலும் இருந்து மக்களின் ஆதரவுகள் குவிந்துகொண்டே போகிறது. பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ் ஆதரவாளர்கள் பலர் சகோதரர் ஹக்கீமின் மீது கொண்ட அதிருப்தியால் என்னுடன் வந்து இணைந்துகொண்டுள்ளார்கள்.
கடந்த பல கூட்டங்களில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மருந்து கட்டுவோம் எனக் கூறி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். அந்த மருந்து கட்டல்தான் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடாகும். ஆந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவகர்சா (மு.கா) , அர்;சத் அவரும் மு.கா உறுப்பினர், மற்றையவர் கௌதர்கான் அவரும் மு.கா வேட்பாளராக களமிறங்கியவர்.
ஆகவே, இந்த மூன்று மு.கா உறுப்பினர்களை அதன் தலைவர் வழிநடத்திக்கொண்டு எனக்கு எதிராக என்னை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அப்பட்டமான பொய்களை சொல்லியிருக்கிறார்கள்.
ளெதர்கான் என்பவர் எனக்க எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த போது இதுபற்றி உயர் சபையிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு இதுபற்றிய உண்மைத் தன்மையைக் வெளிக்கொண்டு வரவேண்டும் எனக் கூறினேன்.
நான் உண்மையில் 3000 ஏக்கர் காணியை வைத்திருந்தால் அல்லது முறையற்ற வகையில் சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தால் அதற்கு எதிராக குற்றம் சாட்டியவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனக்கெதிராக குற்றங்களை சுமத்துவது, அவமானப்படுத்துவதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.
ஆத்துடன், என்னுடைய உறவினர்கள் மெகா நிறுவத்தின் பங்காளிகளாக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. உண்மையில் நான் பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவதற்கு முன்னர் குறித்த நிறுவனத்தை 5 இலட்சம் ரூபா முதலீடு செய்து ஒரு பட்டா ரக வாகனத்தை வைத்துக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தேன்.
பின்னர், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதும், அந்த நிறுவத்தில் இருந்து விலகிக் கொண்டு, எனது மனைவி மற்றும் சகோதரர் , உறவினர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
ஆந்த நிறுவனத்திற்கும் எனக்கும் எதுவிதமான தொடர்புகளும் கிடையாது.எனவே, நான் ஒரு அமைச்சராக இருக்கிறேன். அதனை வைத்துக்கொண்டு அவர்கள் நிறுவனத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அதில் எந்த பிழையும் கிடையாது. இலங்கை தடை செய்யப்படவும் இல்லை.
அவர்கள் வருட இறுதியில் கணக்கு வழக்ககளை காட்டுகிறார்கள். எனவே அதிலும் பிழைகள் இருப்பின் வருமான வரித்துறையினரிடம் முறைப்பாடு செய்யலாம்.நான் உண்மையில் பழை செய்திருந்தால் அல்லது சட்டத்திற்கு முரணாக சொத்து சேர்த்திருந்தால் முன்னாள் ஜனாதிபதியை விட்டு மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருக்க மாட்டேன்.
எனவே, உண்மைகளை அப்படியே மறைத்து என்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால்தான் சNhகதரர ரவூப் ஹக்கீம் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களை துண்டிவிட்டு எனக்கு எதிராக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருக்கிறார். இதுபற்றி இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களும் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். இந்த தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடம்புகட்டுவார்கள்