எனக்கே தண்ணீர் இல்லையா?

வெள்ள அனர்த்தம் ஓய்ந்து தண்ணீர் வற்றி வழமை நிலைமை திரும்பியபோதிலும் இன்னும் மக்கள் நிவாரணத்தில் தங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பொது மக்களும் அரசியல்வாதிகளும் நிவாரணப் பொருட்களை வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இவ்வாறு நிவாரண வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள் பல அசௌகரீகங்களை எதிர்கொண்டார்கள்.இருந்தும்,அவர்களின் பரிதாபம் தொடரவே செய்கின்றது.

மாத்தறை மாவட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மாத்தறை கச்சேரியால் ஐந்து லட்சம் ரூபாவுக்கு குடி நீர் போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டதாம்.அந்த மாவட்டத்தில் நிவாரண வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே மாவட்டத்தைச் சேர்ந்த மஹிந்த அணி எம்பியான முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபாயவர்தன இதை அறிந்து அந்தக் கச்சேரிக்குச் சென்று 100 குடி நீர் போத்தல்கள் கேட்டாராம்.

கச்சேரி அதிகாரிகள் இல்லையென்று மறுத்துவிட்டார்களாம்.நான் குடிப்பதற்காக அல்ல மக்களுக்குக் கொடுப்பதற்காகவே கேற்கிறேன்.தாருங்கள் என்றாராம் எம்பி.

அதிகாரிகளோ ஒரு பெரிய படிவத்தைக் கொடுத்து அதை நிரம்பித் தந்துவிட்டு குடி நீர் போத்தல்களைக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினராம்.

நான் எதிர்க்கட்சி எம்பி என்பதற்காக என்னை இப்படி அவமதிக்கிறீர்களே.ஆளுங்கட்சியாக இருந்திருந்தால் இப்படி நடந்துகொள்வீர்களா என்று கோபத்தைக் கக்கிவிட்டு-படிவத்தை வீசிவிட்டு நடையைக் கட்டினாராம்.

”உண்மைதான் சேர்.நீங்க ஆளுங்கட்சியாக இருந்திருந்தா இப்படிச் செய்திருக்கமாட்டாங்கதான்.உங்க வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்திருப்பாங்க.மக்களின் கணக்கில் உங்களின் பாவனைக்கு.நீங்க ஆட்சியில இருந்தபோது எத்தன கூத்தப் பாத்திருப்போம்”.

[எம்.ஐ.முபாறக் -]