எனது இராணுவ பாதுகாப்பு தொடர்பான ரகசியம் – மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக இருக்கும் போதுதான் தனக்கு முதன் முதலில் இராணுவப் பாதுகாப்பு கிடைக்கப் பெற்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனக்கு இராணுவ பாதுகாப்பை வழங்க அப்போதைய இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ரஞ்ஜன் விஜேரத்ன நடவடிக்கை எடுத்தார். இக்காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச ரத்னபுர மாவட்டத்தில் இடைக்காலத் தேர்தல் ஒன்றை நடாத்தினார். அக்காலத்தில் தான் வீட்டில் இல்லாத போது தனது தங்கல்லை வீட்டுக்கு கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

இதன்போது, அப்போது இராஜாங்க பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்ஜன் விஜேரத்ன தலையிட்டு தனக்கு இராணுவ பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்தார். தான் இன்று இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டி ஏற்பட்டது.

என்னுடைய ஆட்சிக் காலத்தில்தான், நான் இராணுவ பாதுகாப்பை பெற்றுக் கொண்டதாக அதிகமானோர் நினைப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்