எனது கிரிக்கெட் உலகின் நாயகன் கோஹ்லி – தனஞ்சய.

தனஞ்சய சில்வா என்பவர் இலங்கை அணியின் புதுமுக வீரராக களமிறங்கி அசத்தும் வீரர்களில் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே.  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் வரிசையிலும் தனஞ்சய இடம்பிடித்திருந்தார். அதேபோன்று இருபதுக்கு-20 போட்டியிலும் அவரது திறமையினை கண்டு ஏராளமான  ரசிகர்கள் தனஞ்சய பக்கம் சாய்ந்திருந்தனர். நெடுங்காலங்களுக்கு பிற்பாடு இலங்கை அணிக்கு திறமையான துடுப்பாட்ட வீரர் ஒருவர் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகமானோரால் பேசப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தனஞ்சய கிரிக்கெட் உலகில் கால்பதித்த வரலாற்றினை கூறுகையில்;

“நான் கிரிக்கெட் உலகில் கால்பதிக்கும் போது எனக்கு வயது 10 ஆகும். அது தெபரவெவ தேசிய பாடசாலையிலாகும். எனது முதல் பயிற்சியாளராக இருந்தவர் நீள் கமல் என்பவராவர். அதன்பிற்பாடு காலி ரிச்மன்ட் பாடசாலையில் சேர்ந்தேன். அங்கு எனது பயிற்சியாளராக தம்மிக்க சுதர்ஷன் என்பவர் இருந்தார். எனது திறமைகள் வெளியாகுவதற்கு அவர்களே காரணமாக இருந்தனர். 2011ம் ஆண்டில் பாடசாலை அணிக்காக தலைமை தாங்கியமையானது எனது திறமைக்கு மேலும் மெருகூட்டக் கிடைத்த ஒருவாரம் என்றே கருதினேன். அவ்வாறே, 19 வயதிற்கு கீழ் தேசிய அணியில் உட்சேர்க்கப்பட்டேன்”

தனஞ்சயவிற்கு மிகவும் விருப்பமான கிரிக்கெட் வீரர்? இல்லையேல் தனஞ்சயவின் கிரிக்கெட் முன்மாதிரி வீரர்.. யாரென வினவப்பட்டபோது, தனஞ்சய கூறுகையில்;

விராட் கோஹ்லி எனக்கு மிகவும் விருப்பமானவர். நான் மிகவும் நேசிக்கும் வீரரும் அவர்தான். விராட் இனது துடுப்பாட்ட நுணுக்கம் வித்தியாசமானது. ஆனால் அவரை பின்பற்ற மாட்டேன்.

இளம் பெண் ரசிகர்களின் ஆதரவு குறித்து பதிலளித்த தனஞ்சய,

ஆதரவென்றால் குவியுது. நான் முகநூல் பாவிப்பதில்லை. ரசிகர் பக்கம் ஒன்றுள்ளது. எனது தோழர்கள் தான் அதனையும் பராமரிக்கின்றார்கள்.. ஏனெனில் எனக்கு முகநூல் பாவிப்பது பிடிக்கவே பிடிக்காது” எனவும் தெரிவித்திருந்தார்.