(FASTNEWS | COLOMBO)- பில்லேவ விகாரையின் மூத்த தேரர் ஒருவர் தேவையற்ற முறையில் தனது கையினை பிடித்ததாக பிரபல சிங்கள மொழி நடிகையான மதூஷா ராமசிங்க தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் கணக்கில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்து பதிவொன்றினை வெளியிட்டுள்ளார், அதில்;
“எனது கையினை முறையற்ற விதத்தில் தடவி பிரித் நூலினை கட்டினார். நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே எனது கையில் கட்டியிருந்த பிரித் நூலினை வெட்டினார். இவ்வாறான தேரர்களை மக்கள் கண்டு கொள்ள வேண்டும்.
இவர் விகாரைக்கு வணக்க வழிபாட்டுக்கு வரும் மக்களது பணத்தினையும் கொள்ளை கோலும் ஒருவர்.. இவரை மக்கள் வணங்க வேண்டுமா..” என இவரது பதிவு அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
