‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ தேசிய கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் காட்சிக்கூடங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விஜயம் செய்தார்.
மொனறாகலையில் நேற்று ஆரம்பமான ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சி தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் 31ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.