‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியின் இறுதி நாள் இன்று…

மொனராகலையில் இடைபெறும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும்(31). நேற்றைய தினத்தில் (30) ஒரு இலட்சத்து 50,000 இற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

அங்கு மாலை வேளையில் பெய்த அடைமழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்கள்.

கண்காட்சி கடந்த 29ம் திகதி ஆரம்பமானமையும் குறிப்பிடத்தக்கது.